YouTurn

ஏ.ஆர். ரஹ்மானுடன் மோகினி டே-வை இணைத்துப் பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஏ.ஆர். ரஹ்மானுடன் மோகினி டே-வை இணைத்துப் பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இரண்டு வெவ்வேறு வீடியோக்களை இணைத்து Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது வீடியோ இது.

பரவிய செய்தி

மியூசிக் கேட்டு சிரிக்கறவன இப்பதான் பார்க்குறேன்.... பொஞ்சாதி ஏன் தலாக் தலாக் தலாக் சொல்லமாட்டா !?? 


image.png


X Link 

விரிவான விளக்கம்

"ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமான 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியவுள்ளனர்” என்று அவர்களின் வழக்கறிஞரான வந்தனா ஷா கடந்த நவம்பர் 19ஆம் தேதி பொதுவெளியில் அறிவித்தார். இந்த விவாகரத்து அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலே, ஏ.ஆர். ரஹ்மானுடன் 40-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ‘மோகினி டே’  தனது கணவர் மார்க் ஹார்ட்சுச்-ஐ பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.


மோகினி டே கிட்டார் வாசிப்பதற்கு ஏ.ஆர். ரஹ்மான் முகபாவனை கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன: 


இந்த வீடியோவில் கிட்டார் வாசிக்கும் பகுதியின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், மோகினி டே-யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ காணக்கிடைத்தது. அதில், அவர் சில நொடிகள் கிட்டார் வாசிக்கிறார். 


மேலும்,  ஏ.ஆர். ரஹ்மான்-ன் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியதில், கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி, ”Celebrating The Goatlife, Chamkila and Maidaan !’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில்  ஏ.ஆர். ரஹ்மான், The Goat Life (Aadujeevitham) திரைப்படத்தின் இயக்குநர்  ’ப்ளெஸி’-யுடன் இருக்கிறார். 


image.png


ஏ.ஆர். ரஹ்மான்  அவரது Bassist  மோகினி டே ஆகியோரது விவாகரத்து செய்திகள் அடுத்தடுத்த நாட்களில் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டதால், அவர்கள் இருவரையும் தொடர்புப்படுத்தி ‘வதந்திகள்’ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. 


ரஹ்மான் இந்த அவதூறுகளுக்கு எதிராக  சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் பதிலளித்தார். மேலும், அவரது விவாகரத்து தொடர்பாக அவதூறு செய்யும் வீடியோக்கள் அகற்ற வேண்டும் என்று கோரினார். அவரது மனைவி சாய்ரா பானுவும் இந்த வதந்திகளை கண்டித்து பேசியிருக்கிறார். 


இந்த வதந்தியை கண்டித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகினி டே பதிவிட்டுள்ளார். மேலும் “வதந்திகளுக்கு எனது ஆற்றல் செலவழிக்கத் தகுதியற்றது என்று நம்புகிறேன். தயவு செய்து எனது தனியுரிமையை (Privacy) மதிக்கவும்” என்று மோகினி டே குறிப்பிட்டதாக ’The Hindu’ செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாகத்தான், ஏ.ஆர். ரஹ்மான்,  The Goat Life (Aadujeevitham) திரைப்படத்தின் இயக்குநர் ’ப்ளெஸி’-யுடன் இருக்கும் வீடியோவையும், ’மோகினி டே’ கிட்டார் வாசிக்கும் மற்றொரு வீடியோவையும் இணைத்து Edit செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். 


இதிலிருந்து, பரப்பப்படும் வீடியோ இரண்டு வெவ்வேறு வீடியோக்களை இணைத்து Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.


முடிவு:


இந்த வீடியோ ஏ.ஆர். ரஹ்மான் இயக்குநர்  ’ப்ளெஸி’-யுடன் இருக்கும் வீடியோவையும், ’மோகினி டே’ கிட்டார் வாசிக்கும் மற்றொரு வீடியோவையும் இணைத்து Edit செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டதாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.